டேஸ்ட்டியான எள்ளு உருண்டை!!

எள்ளு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்தல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்தகைய எள்ளினைக் கொண்டு எள்ளு உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

எள்ளு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்தல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்தகைய எள்ளினைக் கொண்டு எள்ளு உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை

எள்ளு - 200 கிராம்,

வெல்லம் - 200 கிராம்,

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,

நெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை:

1. வாணலியில் எள்ளைப் போட்டு வறுக்கவும்.

2. அடுத்து வெல்லத்துடன் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.

3. அடுத்து வெல்லப் பாகுடன் எள்ளு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.

4. அடுத்து, நெய் தடவி உருண்டைகளாக உருட்டினால் சுவையான எள்ளு உருண்டை ரெடி.

From around the web