தித்திப்பான அன்னாசி பழ அல்வா ரெசிப்பி!!
 
பொதுவாக நாம் ஆப்பிள், மாம்பழம் போன்ற பழங்களிலேயே அல்வா செய்து சாப்பிட்டு இருப்போம், அந்தவகையில் இப்போது அன்னாசியில் அல்வா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பொதுவாக நாம் ஆப்பிள், மாம்பழம் போன்ற பழங்களிலேயே அல்வா செய்து சாப்பிட்டு இருப்போம், அந்தவகையில் இப்போது அன்னாசியில் அல்வா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
அன்னாசி பழம் - 1 
சர்க்கரை    -  1/2 கப்
நெய்  -  3 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 6
பாதாம் பருப்பு - 4

செய்முறை:
1.    அன்னாசி பழத்தின் தோலைச் சீவி சிறு சிறு துண்டுகளாக  நறுக்கி மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2.    சர்க்கரையினை மிக்சியில் தனியாகப் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
3.    அடுத்து வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, பாதாம் பருப்பு போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். 
4.    இதில் அரைத்த அன்னாசி பேஸ்ட் மற்றும் சர்க்கரைப் பவுடர் சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கினால் அன்னாசி பழ அல்வா ரெடி.

From around the web