ரசம் சாதத்திற்கு ஏற்ற காளான் வறுவல்!!
 

காளானில் நாம் பிரியாணி, கிரேவி, ஃப்ரை என எத்தனை ரெசிப்பிகள் செய்தாலும், பெரும்பாலும் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவது என்னவோ காளான் வறுவல் ரெசிப்பியைத் தான்.

 

காளானில் நாம் பிரியாணி, கிரேவி, ஃப்ரை என எத்தனை ரெசிப்பிகள் செய்தாலும், பெரும்பாலும் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவது என்னவோ காளான் வறுவல் ரெசிப்பியைத் தான்.

தேவையானவை:
காளான் - அரை கிலோ
வெங்காயம் - 1
பூண்டு - 1
பச்சை மிளகாய் – 3
குடை மிளகாய்- 1
மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
உளுந்து – ½ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை: 
1.    காளானை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், பூண்டினை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
3.    அடுத்து காளானை சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து வதக்கி கொத்தமல்லி தூவி இறக்கினால் காளான் வறுவல் ரெடி.

From around the web