டேஸ்ட்டியான காளான் டிக்கா ரெசிப்பி!!
 

காளானில் நாம் இப்போது ஹோட்டல் ஸ்டைலில் டிக்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

காளானில் நாம் இப்போது ஹோட்டல் ஸ்டைலில் டிக்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை :
காளான்- 15
குடை மிளகாய் – 1
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
டிக்கா ஸ்டிக் – 1
இஞ்சி- பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு, 
உப்பு – தேவையான அளவு
 
செய்முறை :
1.    காளானை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தினையும் நறுக்கிக் கொள்ளவும்.
2.    வாணலியில் சோம்பு, வெந்தயம், கடுகு மூன்றையும் போட்டு வறுத்டு மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
3.    அடுத்து  வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடித்த பொடி, வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், மிளகுத் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், காளான்  சேர்த்து அரை வேக்காடாக வதக்கி ஸ்டிக்கில் குடை மிளகாய் துண்டு, வெங்காயத் துண்டு, காளான் என மாற்றி செருகி எடுத்துச் சாப்பிட்டால் டேஸ்ட்டியான காளான் டிக்கா ரெடி.
 

From around the web