செம டேஸ்ட்டியான மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை!!
 

சிக்கன் மற்றும் மட்டனில் பெப்பர் ஃப்ரை செய்து சாப்பிடுவதுபோல் இப்போது சுவையாக மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை ரெசிப்பி செய்வது சாப்பிடலாம் வாங்க. 

 

சிக்கன் மற்றும் மட்டனில் பெப்பர் ஃப்ரை செய்து சாப்பிடுவதுபோல் இப்போது சுவையாக மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை ரெசிப்பி செய்வது சாப்பிடலாம் வாங்க. 

தேவையானவை:
காளான் - அரை கிலோ
வெங்காயம் - 1
இஞ்சி- பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
குடை மிளகாய்- 1
மிளகுத் தூள் - 3 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
உளுந்து – ½ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை: 
1.    காளானை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாயினை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், இஞ்சி- பூண்டு பேஸ்ட்சேர்த்து வதக்கவும்.
3.    அடுத்து காளானை சேர்த்து வதக்கி மிளகுத் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வதக்கி கொத்தமல்லி தூவி இறக்கினால் மஸ்ரூம்  பெப்பர் ஃப்ரை ரெடி.

From around the web