டேஸ்ட்டியான மில்க் கேசரி ரெசிப்பி!
 

கேசரி வகைகளில் நாம் இப்போது ரொம்பவும் டேஸ்ட்டியான மில்க் கேசரி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
டேஸ்ட்டியான மில்க் கேசரி ரெசிப்பி!

தேவையானவை :
பால் – கால் லிட்டர்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 7
ரவை - 100 கிராம்
நெய் – 3 ஸ்பூன்
உலர் திராட்சை – 3
பாதாம் பருப்பு - 3
பிஸ்தா - 2
முந்திரி – 4

செய்முறை:
1. வாணலியில் நெய் ஊற்றி ரவையை வறுக்கவும். அடுத்து ரவையை ஒரு பாத்திரத்தில் கொட்டிவிட்டு நெய் சேர்த்து முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் பால், ரவை, ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.
3. அடுத்து சர்க்கரை  சேர்த்து கிளறி இறக்கி முந்திரி, உலர் திராட்சை, பாதாம் பருப்பு, பிஸ்தா சேர்த்துக் கிளறி இறக்கினால் மில்க் கேசரி ரெடி.
 

From around the web