டேஸ்ட்டியான மத்தி மீன் குழம்பு ரெசிப்பி!!
 
மத்தி மீன்கள் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற மீன் வகையாகும். மேலும் இது இதய நோய் பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுக்கின்றது. இப்போது மத்தி மீன் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை :
மத்தி மீன் – 500 கிராம்
கடுகு - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி - 1
வெந்தயம்- ½ ஸ்பூன்
மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
தனியா தூள்- 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :
1. மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து தக்காளியை நறுக்கி கொள்ளவும். புளியை தண்ணீரில் நன்கு ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், மேலும் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
4. அடுத்து மீன் துண்டுகளைப் போட்டு எண்ணெய் பிரியும் போது இறக்கினால் மத்தி மீன் குழம்பு ரெடி.

From around the web