டேஸ்ட்டியான ஈரல் கிரேவி!
 

ஈரலைப் பொதுவாக பிரசவித்த பெண்களுக்குக் கொடுப்பது வழக்கம். இப்போது நாம் ஈரலில் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
டேஸ்ட்டியான ஈரல் கிரேவி!

தேவையானவை:
ஆட்டு ஈரல் – 500 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி – 1
பூண்டு – 1
பட்டை- 2, 
ஏலக்காய் – 2
கிராம்பு - 2
பச்சைமிளகாய் - 1
மிளகாய்த் தூள் – ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
தனியா தூள் – ¼ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
1.    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டு சேர்த்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை வதக்கி மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து அரைத்த வெங்காயம்- தக்காளி பேஸ்ட் மற்றும் இஞ்சி – பூண்டு பேஸ்ட்டினைப் போட்டு மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கினால் ஆட்டு ஈரல் கிரேவி ரெடி. 
 

From around the web