டேஸ்ட்டியான கிரில் சிக்கன் செய்யலாம் வாங்க!!
சிக்கனில் கிரில் சிக்கன் பொதுவாக பலரும் விரும்பிச் சாப்பிடும் உணவு வகையாகும். இதனைப் பொதுவாக நாம் ஹோட்டல்களிலேயே வாங்கிச் சாப்பிட்டு இருப்போம். இப்போது வீட்டிலேயே கிரில் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
சிக்கன் - 1/2 கிலோ
மிளகாய்த் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
முட்டை - 1
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
1. சிக்கனை கழுவி கத்தி மேல் கீறிக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் சிக்கன், கரம் மசாலா, மிளகுத் தூள், இஞ்சி- பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சோயா சாஸ், தயிர், முட்டை, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
3. அடுத்து மைக்ரோவேவ் ஓவனில் சிக்கன் மீது எண்ணெய் சேர்த்து ஓவனில் வைத்து 20 நிமிடம் வேகவைத்து எடுத்தால் கிரில் சிக்கன் ரெடி.