டேஸ்ட்டியான தேங்காய்பால் பாயாசம் ரெசிப்பி!!
 
நாம் பொதுவாக பாசிப்பருப்பு, ஜவ்வரிசி போன்றவற்றிலேயே பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்போம். அந்தவகையில் இப்போது ரொம்பவும் ருசியாக தேங்காய்ப் பாலில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

நாம் பொதுவாக பாசிப்பருப்பு, ஜவ்வரிசி போன்றவற்றிலேயே பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்போம். அந்தவகையில் இப்போது ரொம்பவும் ருசியாக தேங்காய்ப் பாலில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை
தேங்காய் - 1
பச்சரிசி – 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - 1 ஸ்பூன்
வெல்லம் – 1/4 கிலோ
திராட்சை - 10 
முந்திரி - 10 

செய்முறை :
1.    நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். அடுத்து தேங்காயில் தண்ணீர்விட்டு மிக்சியில் போட்டு அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும். வெல்லத்தைப் பொடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பாலை ஊற்றி  கொதிக்க வைத்து, அரிசியைப் போடவும். 
3.    அடுத்து வெல்லத்தை சேர்த்து  ஓரளவு வேகவிட்டு முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள்  சேர்த்து இறக்கினால் தேங்காய்ப் பால் பாயாசம் ரெடி.

From around the web