டேஸ்ட்டியான சிக்கன் கோலா உருண்டை!!
 

சிக்கனில் நாம் இப்போது ரொம்பவும் வித்தியாசமான கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
டேஸ்ட்டியான சிக்கன் கோலா உருண்டை!!

தேவையானவை:
சிக்கன் – 1/2 கிலோ
முட்டை - 2
கடலை மாவு – 25 கிராம்
வெங்காயம் - 2 
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி – தேவையான அளவு
புதினா – தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- ½ ஸ்பூன், 
சீரகம்- ½ ஸ்பூன், 
சோம்பு- ½ ஸ்பூன், 
கரம்மசாலா – ¼ ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு.
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் சிக்கன், உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு  பேஸ்ட் சேர்த்து 3  விசில் விட்டு இறக்கவும்.
2. அடுத்து சிக்கனை மிக்ஸியில் போட்டு அரைத்து அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து அரைத்த கலவையுடன் கடலை மாவு, மிளகுத் தூள், சீரகம், சோம்பு, கரம் மசாலா தூள் சேர்த்துக் கையால் பிசையவும்.
4. அடுத்து மிக்சியில் போட்டு முட்டையினை நுரை பொங்க அடித்துக் கலந்துகொள்ளவும்.
5. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த கலவையை உருண்டைகளைப் பிடித்துப் போட்டு பொரித்து எடுத்தால் சிக்கன் கோலா உருண்டை ரெடி.
 

From around the web