டேஸ்ட்டியான காலிஃப்ளவர் மிளகுப் பொரியல்!!

காலிஃப்ளவர் அதிக அளவில் நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. அத்தகைய காலிஃப்ளவரில் மிளகுப் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

காலிஃப்ளவர் அதிக அளவில் நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. அத்தகைய காலிஃப்ளவரில் மிளகுப் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
காலிஃப்ளவர் -  1,
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்,
வெங்காயம் - 2,
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்,
பட்டை- 2
இலவங்கம்- 2
ஏலக்காய் - 1
பூண்டு -1, 
இஞ்சி- 1 துண்டு
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை : 
1.    காலிஃப்ளவரை சுடுநீரில் போட்டு கொதிக்கவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், பூண்டு, இஞ்சி இவை அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி காலிஃப்ளவர் போட்டு தண்ணீர்விட்டு 10 நிமிடம் வேகவிட்டு எடுத்துச் சாப்பிட்டால் காலிஃப்ளவர் மிளகுப் பொரியல் ரெடி.

From around the web