டேஸ்ட்டியான பிரெட் சீஸ் ஆம்லெட்!!
 

பிரெட்டில் இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான சீஸ் ஆம்லெட் ரெசிப்பியினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

பிரெட்டில் இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான சீஸ் ஆம்லெட் ரெசிப்பியினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை: 
பிரெட் - 4 
சீஸ்- துருவியது
முட்டை - 3 
வெங்காயம் - 1 
கொத்தமல்லி – தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2 
மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன் 
பட்டர் - 2 ஸ்பூன் 
கரம் மசாலா – 1/2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 
1.    வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி சீஸ், வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். 
3.    அடுத்து தோசைக் கல்லில் வெண்ணெய் தடவி பிரெட்டினைப் போட்டு முட்டை கலவையை அதன் மீது ஊற்றி முட்டை வெந்தபின்னர் பிரெட் துண்டுகளை வைத்து நான்கு புறமும் மடித்து எடுத்தால் பிரெட் சீஸ் ஆம்லெட் ரெடி. 
 

From around the web