டேஸ்ட்டியான பாகற்காய் சிப்ஸ்!
 

பாகற்காய் சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் குறைப்பதாக உள்ளது. இந்த பாகற்காயில் இப்போது சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

தேவையானவை:
பாகற்காய் - அரை கிலோ
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
கான்பிளவர் மாவு- 2 ஸ்பூன்
அரிசி மாவு- 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
 
செய்முறை:
1.    பாகற்காயில் உள்ள விதைகளை நீக்கி வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு, கான்பிளவர் மாவு, பாகற்காய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பாகற்காயினைப் போட்டு பொரித்து எடுத்தால் பாகற்காய் சிப்ஸ் ரெடி.

From around the web