டேஸ்ட்டியான அத்தோ ரெசிப்பி!!
 

அத்தோ அதிக அளவிலான நபர்களால் விரும்பி உண்ணப்படும் உணவு வகையாக உள்ளது, பர்மா உணவான அத்தோவை அனைத்து இடங்களிலும் மக்கள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

 

தேவையானவை:
நூடுல்ஸ் – கால் கிலோ
தட்டை - 2
பூண்டு - 1
வெங்காயம் - 2
முட்டைக்கோஸ் – கால் அளவு
கேரட் - 1
எலுமிச்சை சாறு -  1 ஸ்பூன்
புளி – அரை நெல்லிக்காய் அளவு
கேசரி பவுடர் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு


செய்முறை:
1. கொத்தமல்லி, வெங்காயம், கேரட், முட்டைகோஸினை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புளியை நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். தட்டுவடையினை நொறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நூடுல்ஸ், கேசரி பவுடர், உப்பு போட்டு வேகவிட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும். 
3. அடுத்து வாணலியில் எண்ணெய்விட்டு பூண்டு, வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட்டினை போட்டு லேசாக வதக்கவும்.
4. அடுத்து எலுமிச்சை சாறு, புளிக் கரைசல், மிளகாய் தூள், உப்பு, தட்டு வடை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கினால் அத்தோ ரெடி.

From around the web