தித்திப்பான அவல் பாயாசம் ரெசிப்பி!!
 
அவல் உடல் எடையினைக் குறைக்கச் செய்வதாகவும், ஆரோக்கியம் நிறைந்த உணவாகவும் கருதப்படுகின்றது. இத்தகைய அவலில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அவல் உடல் எடையினைக் குறைக்கச் செய்வதாகவும், ஆரோக்கியம் நிறைந்த உணவாகவும் கருதப்படுகின்றது. இத்தகைய அவலில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை :
அவல் - 1/2 கப்
வெல்லம் - 1/4 கப்
பால் - 2 கப்
ஏலக்காய் - 1
முந்திரிப்பருப்பு - 5
நெய் - 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

1. வாணலியில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து நெய்யில் அவலை போட்டு வறுக்கவும்.
3. அடுத்து பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும், பால் கொதிக்கும்போது அவலைக் கொட்டி வேக விடவும்.
4. அடுத்து தண்ணீரில் வெல்லத்தை பாகுபோல் காய்ச்சி அவலுடன் கலக்கவும். அடுத்து ஏலக்காய், முந்திரி சேர்த்து வேகவிட்டு இறக்கினால் அவல் பாயாசம் ரெடி.
 
From around the web