காரசாரமான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு!!
 

ஆந்திரா ஸ்டைல் உணவு என்றாலே நிச்சயம் அது காரசாரமாக இருக்கும். இப்போது நாம் ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
காரசாரமான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு!!

ஆந்திரா ஸ்டைல் உணவு என்றாலே நிச்சயம் அது காரசாரமாக இருக்கும். இப்போது நாம் ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
மீன் – 500 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி -2
காய்ந்த மிளகாய்- 5
பச்சை மிளகாய்- 3
தனியா- 1 ஸ்பூன்
மிளகு- 1 ஸ்பூன்
சீரகம்- ½ ஸ்பூன்
பூண்டு -   10 பல்
கடுகு   - 1  ஸ்பூன்
கறிவேப்பிலை  - சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
புளி- எலுமிச்சை அளவு

செய்முறை
1. மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாயை, தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் மிளகு, தனியா, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை  போட்டு தாளித்து,  வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைப் போட்டு  வதக்கவும்.
3. அடுத்து அரைத்த தூளைப் போட்டி புளித் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு மீனைப் போட்டு வேகவிடவும்.
5. எண்ணெய் பிரிந்துவரும்போது இறக்கினால் ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு  ரெடி
 


 

From around the web