வேலைக்கு போகும் பெண்ணா நீங்கள்?! அப்ப உங்களுக்குதான் இந்த சமையல் டிப்ஸ்

1. வேலைக்கு செல்பவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் புளியை நேரம் கிடைக்கும் போது , கெட்டியாக கரைத்து, உப்பு போட்டு கொதிக்கவிட்டு பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டு, சமையலுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம். 2. கறும்பு சாறு சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்தால் சுவையோ,சுவை. 3. மெதுவடைக்கு அரைக்கும் போது ஒரு கைப்பிடி சாதம் சேர்த்து அரைத்தால் மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே சாப்டாகவும் இருக்கும். 4. தோசை கருகாமல் வர ஒவ்வொரு தோசை ஊற்றும்போதும் லேசாக தண்ணீர்
 
வேலைக்கு போகும் பெண்ணா நீங்கள்?! அப்ப உங்களுக்குதான் இந்த சமையல் டிப்ஸ்1. வேலைக்கு செல்பவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் புளியை நேரம் கிடைக்கும் போது , கெட்டியாக கரைத்து, உப்பு போட்டு கொதிக்கவிட்டு பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டு, சமையலுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.

2. கறும்பு சாறு சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்தால் சுவையோ,சுவை.

3. மெதுவடைக்கு அரைக்கும் போது ஒரு கைப்பிடி சாதம் சேர்த்து அரைத்தால் மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே சாப்டாகவும் இருக்கும்.

4. தோசை கருகாமல் வர ஒவ்வொரு தோசை ஊற்றும்போதும் லேசாக தண்ணீர் தெளித்து ஊற்றினால் தீயாமல் நிறமாக வரும்.

5. பலகாரங்களுக்கு வெள்ளை எள்ளை விட கறுப்பு எள் நல்லது.பார்க்கவும் அழகாக இருக்கும்.ருசியும் சூப்பர்.

6. காய்கறிகளை பொடியாக நறுகினால் சீக்கிரம் வெந்து விடுவதுடன், காயின் நிறமும்,சத்தும் கிடைக்கும்.காய் நறுக்கியதை பார்த்தாலே சாப்பிட ஆசை வர வேண்டும்.

7. காய்களை புதியதாக வாங்கி சமைத்தால், சத்தும், வாசனையும் அபாரம்.

8. பால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாய் இருப்பதோடு சுவையும் அபாரமாய் இருக்கும்.

9. சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிகிழங்கு, வேர்க்கடலை, துவரை, மொச்சை வேகவைக்க வேண்டுமென்றால் இட்லி வேக வைக்கும்போது இட்லி பானையில் அடியில் போட்டு இட்லி வேலையும் மிச்சம், எரிவாயும் மிச்சம்.

10. முள்ளங்கி சமைக்கும் போது லேசாக வதக்கி சமைத்தால், எளிதில் சளி பிடிக்காது.From around the web