சமையலில் செய்யக்கூடாதவை – சமையல் குறிப்புகள்

சமையலில் என்னவெல்லாம் செய்யனும்ன்னு நினைவில் வைத்துக்கொள்வதுபோல என்னவெல்லாம் செய்யக்கூடாதெனவும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சமையல் செய்யக்கூடாதவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.. ரசத்தினை அதிகமாக கொதிக்க விடக்கூடாது. அப்படி கொதித்தால் ரசம் கசக்க ஆரம்பிக்கும். காபிக்கு பால் நன்றாக கொதிக்கக்கூடாது. பொங்கிவரும்போதே டிகாஷனில் பால் கலந்துடனும். மோர்க்குழம்பு ஆறும்வரை மூடக்கூடாது. அப்படி செய்தால் குழம்பு நீர்த்து போகும். கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. மூடி சமைத்தால் கீரையின் நிறம் மாறிப்போகும். காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. காய்கறியிலுள்ள சத்துக்கள் வீணாகிடும்ரசம் உள்ளிட்ட
 
சமையலில் செய்யக்கூடாதவை – சமையல் குறிப்புகள்

சமையலில் என்னவெல்லாம் செய்யனும்ன்னு நினைவில் வைத்துக்கொள்வதுபோல என்னவெல்லாம் செய்யக்கூடாதெனவும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சமையல் செய்யக்கூடாதவற்றில் சிலவற்றை பார்க்கலாம்..

ரசத்தினை அதிகமாக கொதிக்க விடக்கூடாது. அப்படி கொதித்தால் ரசம் கசக்க ஆரம்பிக்கும்.

காபிக்கு பால் நன்றாக கொதிக்கக்கூடாது. பொங்கிவரும்போதே டிகாஷனில் பால் கலந்துடனும்.
மோர்க்குழம்பு ஆறும்வரை மூடக்கூடாது. அப்படி செய்தால் குழம்பு நீர்த்து போகும்.
கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. மூடி சமைத்தால் கீரையின் நிறம் மாறிப்போகும்.
காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. காய்கறியிலுள்ள சத்துக்கள் வீணாகிடும்
ரசம் உள்ளிட்ட சமையல் சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

சமையலில் செய்யக்கூடாதவை – சமையல் குறிப்புகள்


குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. காய்கறிகளை நறுக்குவதற்குமுன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.

சமைக்கும்போது அலைப்பேசி, தொலைக்காட்சியை தவிர்க்கவும். இப்படி சமைச்சாலே சாப்பாடு ருசிக்கும்.

From around the web