புரதச் சத்து நிறைந்த வாழைப்பழ கேக் ரெசிப்பி!!
 

வாழைப்பழத்தில் அதிக அளவில் புரதச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, மேலும் உடல் எடையினைக் கூட்ட நினைப்போரும் வாழைப்பழத்தினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இப்போது சுவையான வாழைப்பழ கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
புரதச் சத்து நிறைந்த வாழைப்பழ கேக் ரெசிப்பி!!

தேவையானவை:
வாழைப்பழம்- 3
மைதா மாவு – 250 கிராம்
சர்க்கரை- 250 கிராம்
வெண்ணெய் – 3 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் : 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா : 1/2 ஸ்பூன்
முட்டை : 4

செய்முறை:
1.    சர்க்கரையினை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்தினை தோல் உரித்துப் போட்டு மசித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து அந்த கிண்ணத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங்க் சோடா சேர்த்து பிசையவும். 
3.    அடுத்து வெண்ணெய், அரைத்த சர்க்கரை, முட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
4.    அடுத்து இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஒரு தட்டில் வெண்ணெய் தடவி இதனை ஊற்றி மைக்ரோ ஓவனில் வேகவிட்டால் வாழைப்பழ கேக் ரெடி.
 

From around the web