ஓணம் ஸ்பெஷல்: டேஸ்ட்டியான எரிசேரி!!

கேரளத்து உணவு வகைகளில் பலரும் விரும்பிச் சாப்பிடும் உணவுகளில் ஒன்று எரிசேரி. இதனை ஒருமுறை வீட்டில் செய்து கொடுத்தால் அனைவரும் கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிடுவர்.

கேரளத்து உணவு வகைகளில் பலரும் விரும்பிச் சாப்பிடும் உணவுகளில் ஒன்று எரிசேரி. இதனை ஒருமுறை வீட்டில் செய்து கொடுத்தால் அனைவரும் கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிடுவர்.

தேவையான பொருட்கள் :

சேனை - 100 கிராம்

நேந்திரங்காய்- 1

மிளகு தூள்- 1 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய்- 100 கிராம்

நெய்- 25 கிராம்

சீரகம்- 1 ஸ்பூன்

கடுகு- 1 ஸ்பூன்

தேங்காய் துருவியது- 1 கப்

கறிவேப்பிலை- தேவையான அளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

1. சேனையையும், நேந்திரங்காயையும் வெட்டவும். அடுத்து இதனுடன்

மிளகு தூள், சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து வேகவிடவும்.

2. அடுத்து தேங்காய் எண்ணெய், நெய் ஊற்றி தாளிக்க கடுகு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தாளிக்கவும்.

4. இறுதியாக தாளித்த பொருட்களை, வேகவைத்த சேனை- நேந்திரங்காயுடன் சேர்த்துக் கலக்கவும்.

5. இப்போது டேஸ்ட்டியான எரிசேரி ரெடி.

From around the web