சத்துக்கள் நிறைந்த மசாலா பால்!!

மசாலா பாலினை பொதுவாக எல்லோரும் கடையிலேயே வாங்கிச் சாப்பிடுவர். மிகவும் சுவைமிக்க மற்றும் சத்தான மசாலா பாலினை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மசாலா பாலினை பொதுவாக எல்லோரும் கடையிலேயே வாங்கிச் சாப்பிடுவர். மிகவும் சுவைமிக்க மற்றும் சத்தான மசாலா பாலினை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பால் - 2 கப்

சர்க்கரை - 1 டீஸ்பூன்

பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

கிராம்பு - 2

பட்டை - 1/2 இன்ச்

ஏலக்காய் – 2

பாதாம் - 4

பிஸ்தா - 6

குங்குமப்பூ – சிறிதளவு

செய்முறை :

1.  பாதாம் மற்றும் பிஸ்தாவை நீரில் 2 மணி நேர ஊற வைத்து, மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

2. அடுத்து குங்குமப்பூவை கொஞ்சம் பால் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

3. அடுத்து ஒரு பாத்திரத்தில் பால், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

4. அதன்பின்னர் பாலை வடிகட்டி குங்குமப்பூ, மிளகுத் தூள், சர்க்கரை, பனங்கற்கண்டு, மற்றும் முந்திரிக் கலவையினை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டால் மசாலா பால் ரெடி.

From around the web