சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்கும் வேப்பம்பூ துவையல்!
 

சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளில் வேப்பம்பூவும் ஒன்று, இப்போது நாம் வேப்பம்பூவில் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்கும் வேப்பம்பூ துவையல்!

தேவையானவை:
வேப்பம் பூ – கைப்பிடியளவு
தேங்காய் – 5 துண்டுகள்
மிளகாய் வற்றல் - 3
புளி - சிறிதளவு
உளுந்து – ¼ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
1. வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் மற்றும் உளுந்து சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
2. அடுத்து உளுந்தை வறுத்து அதனுடன் தேங்காய், வேப்பம் பூ, புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்தால் வேப்பம் பூ துவையல் ரெடி.

From around the web