சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்கும் கோவைக்காய் பொரியல்!
 

கோவைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைப்பதாக உள்ளது. இப்போது நாம் கோவைக்காயில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்கும் கோவைக்காய் பொரியல்!

தேவையானவை: 
கோவைக்காய் - 8 
வெங்காயம் - 2 
தக்காளி - 1 
கடுகு - 1 ஸ்பூன் 
உளுந்து பருப்பு – 1/2 ஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு 
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் 
தனியாத் தூள் - 2 ஸ்பூன் 
சோம்பு - 1/2 ஸ்பூன்  
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை: 
1.    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி மற்றும் சோம்பினை வதக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
3.    அடுத்து நறுக்கிய வெங்காயம் மற்றும் கோவைக்காயைப் போட்டு வதக்கி, அரைத்த பேஸ்ட்டினைப் போட்டு சேர்த்து மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி வேகவைத்து இறக்கினால் கோவைக்காய் பொரியல் ரெடி. 
 

From around the web