குழந்தைகளுக்குப் பிடித்தமான மொறுமொறு சோயா 65 ரெசிப்பி!!
 

மாலை வேளைகளில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையிலான  ஒரு ரெசிப்பியைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். அதாவது சோயாவில் இப்போது 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

மாலை வேளைகளில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையிலான  ஒரு ரெசிப்பியைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். அதாவது சோயாவில் இப்போது 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சோயா - 100 கிராம்
இஞ்சி- 1 துண்டு
பூண்டு- 1
சிக்கன் 65 மசாலா -  3 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
கான்பிளவர் மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
1.  சோயாவினை வெந்நீரில் போட்டு ஊறவிட்டு, பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் சோயா, தயிர், சிக்கன் 65 மசாலா, கான்பிளவர் மாவு, மைதா மாவு, இஞ்சி- பூண்டு ஃபேஸ்ட், உப்பு நன்கு கலந்து ஊறவைத்துக் கொள்ளவும்..
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சோயாவினைப் போட்டு பொரித்து எடுத்தால் சோயா 65 ரெடி.

From around the web