குழந்தைகளுக்குப் பிடித்தமான ஊளி மீன் குழம்பு ரெசிப்பி!!
 
ஊளி மீன் மிகக் குறைந்த முட்களையே கொண்டுள்ளதால் குழந்தைகள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடும் மீன் வகையாக இது இருக்கின்றது. மேலும் இதன் மற்றொரு பெயர் மூக்கு மீன் என்றும் சொல்லுவர். இதில் நாம் இப்போது குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை: 
ஊளி மீன் – 1 கிலோ
சின்ன வெங்காயம் - 10 
தக்காளி - 1/4 கிலோ 
புளி - எலுமிச்சை அளவு 
தனியாத் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சீரகம்- 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன் 
வெந்தயம்- 1/4 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு 

செய்முறை: 
1.    மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும். 
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
3.    அடுத்து மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
4.    அடுத்து அதில் புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும். 
5.    குழம்பு கொதித்த பின்னர், கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால் ஊளி மீன் குழம்பு ரெடி.
 
From around the web