குழந்தைகளுக்குப் பிடித்தமான சாக்லேட் ஐஸ்கிரீம்!!

ஐஸ்கிரீம் வகைகளில் வென்னிலா, சாக்லேட், கார்னெட்டோ எனப் பலவகைகள் உண்டு, அவற்றில் ஒன்றான சாக்லேட் ஐஸ்கிரீமை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

ஐஸ்கிரீம் வகைகளில் வென்னிலா, சாக்லேட், கார்னெட்டோ எனப் பலவகைகள் உண்டு, அவற்றில் ஒன்றான சாக்லேட் ஐஸ்கிரீமை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

கிரீம் - 1 1/2 கப்

பால் - 1/2 கப்
கோகோ பவுடர் - 1/4 கப்
இன்ஸ்டன்ட் காபித் தூள் - 1/2 ஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப்
உப்பு - 1/4 ஸ்பூன்
வெண்ணிலா எசென்ஸ் - 1/4  ஸ்பூன்


செய்முறை :

1. பாலை காய்ச்சி பிரிட்ஜில் 5 மணி நேரம் வைக்கவும்.

2. அடுத்து ஒரு பாத்திரத்தில் கோகோ பவுடர், சர்க்கரை, இன்ஸ்டன்ட் காபி தூள் சேர்த்து கலக்கி, பாலுடன் சேர்த்து மிக்சியில் அடித்து பிரிட்ஜில் வைக்கவும்.

3. அடுத்து 2 மணி நேரம் கழித்து எடுத்து அதனுடன் கிரீம் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து மீண்டும் அடித்து ப்ரீசரில் 3 மணி நேரம் வைக்கவும்.

4. அடுத்து அதனை எடுத்து மிக்சியில் அடித்து பிரிட்ஜில் வைத்து எடுக்கவும், மொத்தமாக 4 முறை மிக்சியில் அடித்து வைத்து எடுத்து சாப்பிட்டால் சாக்லேட் ஐஸ்கிரீம் ரெடி.

From around the web