குழந்தைகளுக்குப் பிடித்தமான வௌவால் மீன் குழம்பு ரெசிப்பி!!
 
வௌவால் மீன் கடல் மீன் வகையினைச் சார்ந்தது. இதனைப் பொதுவாக ஃப்ரை செய்து சாப்பிடவே செய்வர். இதில் நாம் இப்போது குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை: 
வௌவால் மீன் – 1 கிலோ
சின்ன வெங்காயம் - 10 
தக்காளி - 1/4 கிலோ 
புளி - எலுமிச்சை அளவு 
தனியாத் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சோம்பு- 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன் 
வெந்தயம்- 1/4 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு 

செய்முறை: 
1.    மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும். 
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சோம்பூவைப் போட்டு அரைத்து பேஸ்ட்போல் ஆக்கிக் கொள்ளவும்.
3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து அரைத்த கலவையைச் சேர்த்து வதக்கவும்.
4.    அடுத்து மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
5.    அடுத்து அதில் புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும். 
6.    குழம்பு கொதித்த பின்னர், கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால் வௌவால் மீன் குழம்பு ரெடி.
 
From around the web