கத்தரிக்காய் புளிக் குழம்பு ரெசிப்பி!!
 

கத்தரிக்காயில் இப்போது நாம் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான புளிக் குழம்பினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

கத்தரிக்காயில் இப்போது நாம் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான புளிக் குழம்பினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
கத்திரிக்காய் - 6
சின்ன வெங்காயம் - 10 
தக்காளி - 1
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுந்து - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
புளி – எலுமிச்சை அளவு
தயிர்- 3 ஸ்பூன்

செய்முறை :
1. கத்தரிக்காயின் காம்புகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை தண்ணீரில் நன்கு ஊறவைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். அடுத்து கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.
3. அதன்பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
4. அடுத்து புளிக் கரைசல் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கி விடவும்.
5. இறுதியில் தயிர் சேர்த்துக் கலந்து இறக்கினால்  கத்தரிக்காய் புளிக் குழம்பு ரெடி.

From around the web