தித்திப்பான பலாப்பழ அல்வா ரெசிப்பி!!
 
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவு வகையாகும். இந்த பலாப்பழத்தில் இப்போது அல்வா செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
 
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவு வகையாகும். இந்த பலாப்பழத்தில் இப்போது அல்வா செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

தேவையானவை :

பலாச்சுளை - 10
சர்க்கரை – 250 கிராம்
நெய் - 4 ஸ்பூன்
முந்திரி- 7, 
திராட்டை – 5,
ஏலக்காய் - 3

செய்முறை :

1. பலாச்சுளையின் தோலினை நீக்கி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் நெய் ஊற்றி பலாச்சுளை மற்றும் சர்க்கரை போட்டு கைவிடாமல் கிளறவும்.
3. மற்றொருபுறம் நெய்யில் முந்திரி, திராட்டை, ஏலக்காய் தூள் சேர்த்து வறுத்து அல்வாவுடன் சேர்க்கவும்.
4. நெய் பிரிந்துவரும் போது இறக்கினால் பலாப்பழ அல்வா ரெடி.
 
From around the web