சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

நெல்லிக்காய் ஊறுகாயினை நாம் பொதுவாக கடைகளிலேயே வாங்கிச் சாப்பிட்டு வருகிறோம், ஆனால் என்னதான்  கடைகளில் வாங்கிச் சாப்பிட்டாலும் வீட்டில் சாப்பிடுவது போல் வராது. இப்போது நெல்லிக்காய் ஊறுகாயினை செய்வது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
 
தேவையானவை:
நெல்லிக்காய் - 10
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
வெந்தயத் தூள் - 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நெல்லிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
2. அடுத்து நெல்லிக்காயில் இருந்து கொட்டையை நீக்கி உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். 
5. அடுத்து கலவையுடன் வெந்தயப் பொடியை தூவி 15 நிமிடங்கள் வேகவிடவும்.
6. இப்போது சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.
 
From around the web