ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு ரவா தோசை சுடுவது இப்படித்தான்…

இட்லி, தோசை மாவு இல்லாதபோதும், விருந்தாளிகள் திடீரென வந்தாலும் மிக சுலமாகவும், சுவையாகவும் ரவா தோசை செய்து கொடுத்து அசத்திடலாம்!! தேவைப்படும் பொருட்கள்: ரவா – ஒரு கப்அரிசி மாவு – கால் கப்தயிர் – கால் கப்உப்பு – ஒரு தேக்கரண்டிதண்ணீர் – 2 1/2 கப்பொடித்த மிளகு – 10மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2மிகப் பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு இன்ச் துண்டுமிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் –
 

இட்லி, தோசை மாவு இல்லாதபோதும், விருந்தாளிகள் திடீரென வந்தாலும் மிக சுலமாகவும், சுவையாகவும் ரவா தோசை செய்து கொடுத்து அசத்திடலாம்!!

தேவைப்படும் பொருட்கள்:

ரவா – ஒரு கப்
அரிசி மாவு – கால் கப்
தயிர் – கால் கப்
உப்பு – ஒரு தேக்கரண்டி
தண்ணீர் – 2 1/2 கப்
பொடித்த மிளகு – 10
மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
மிகப் பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு இன்ச் துண்டு
மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
தோசை சுடுவதற்கு நெய்/எண்ணெய் – கால் கப்

செய்முறை :

மாவு கரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கரைத்து வைக்கவும். தோசைமாவைவிட நீர்க்க இருக்கனும்கரைத்த மாவுடன் பொடித்த மிளகு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை கலந்து வைக்கவும். தோசை தவாவை காயவைத்து அதில் ஒரு கரண்டி மாவை சுற்றி ஊற்ற அது தானாகவே பரவிக் கொள்ளும்.எண்ணெய் அல்லது நெய் சேர்த்து திருப்பி போட்டு மொறுகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும். இதற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி ஏற்ற ஜோடி

குறிப்பு: மாவு கரைக்க மொத்தமாக எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு சுற்றினால் போதும் ஈஸியாக கரைந்து கட்டியில்லாமல் வரும். மொறுமொறு ஹோட்டல் ரவா தோசைக்கு மாவை பால் போல கரைத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் இருந்தால் நல்ல ஓட்டை ஓட்டையாக தானாக தவாவில் பரவும் தீயை இதற்கு கூட்டியே வைக்க வேண்டும். தோசை ஊற்றிய பின் அடுப்பை சிம்மில் வைத்து பொறுமையாக ஊற்றி ஒரு புறம் நன்கு மொறுமொறுவென வெந்த பின் திருப்பி போட வேண்டும்.

From around the web