வீட்டிலேயே சிக்கன் மசாலா பொடி!!

56a43fb72e74f40ed624a3b941834c7c

தேவையானவை:
கொத்தமல்லி – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 10
ஏலக்காய் – 1 ஸ்பூன்
மஞ்சள் – 1
கசகசா – 1 ஸ்பூன்
பிரிஞ்சி இலை – 3
ஸ்டார் பூ – 2
பட்டை – 3
கிராம்பு – 7
ஏலக்காய் – 4
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
சோம்பு – 2 ஸ்பூன்
அரிசி – 2 ஸ்பூன்
கல் பாசி – தேவையான அளவு

செய்முறை :
1.    வாணலியில் எண்ணெய் விடாமல் அனைத்துப் பொருட்களையும் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
2.    இதனை ஆறவிட்டு மிக்சியில் போட்டு பொடியாக அரைத்தால்  சிக்கன் மசாலா பொடி ரெடி.
இந்த சிக்கன் மசாலா பொடியினை டப்பாவில் அடைத்துவைத்துப் பயன்படுத்தவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews