ஆரோக்கியம் நிறைந்த காய்கறி சூப்
 

சைவப் பிரியர்கள் விரும்பிக் குடிக்கும் வகையிலான சூப்பினை நாம் இப்போது காய்கறிகளைக் கொண்டு தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

 
ஆரோக்கியம் நிறைந்த காய்கறி சூப்

சைவப் பிரியர்கள் விரும்பிக் குடிக்கும் வகையிலான சூப்பினை நாம் இப்போது காய்கறிகளைக் கொண்டு தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையானவை:
கேரட் – 2 
பீன்ஸ் – 6 
பச்சைப்பட்டாணி – 20 
முட்டைக்கோஸ் – ½
சின்ன வெங்காயம் – 10 
தக்காளி – 1 
பாசிப்பருப்பு – 1 ஸ்பூன்
சீரகத்தூள் – 1ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை –தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
1.    கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைக்கோஸ், பீன்ஸ், தக்காளி, கொத்தமல்லி இலை மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து குக்கரில் பாசிப்பருப்பு, கேரட், முட்டைக்கோஸ், தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகத் தூள், மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி காய்கறிக் கலவையைப் போட்டு இறக்கினால் காய்கறி சூப் ரெடி.
 

From around the web