சத்துமிக்க வரகரிசி பணியாரம்!!

பொதுவாக நாம் பச்சரிசியில் பணியாரம் செய்வோம், அந்தப் பணியாரத்தை வரகரிசியில் செய்வது செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

பொதுவாக நாம் பச்சரிசியில் பணியாரம் செய்வோம், அந்தப் பணியாரத்தை வரகரிசியில் செய்வது செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

 வரகரிசி - 1/2 கப்

உளுந்தம்பருப்பு  - 1/2 கப்

வெங்காயம் - 1

காய்ந்த மிளகாய் - 4

உப்பு- தேவையான அளவு,

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு- தேவையான அளவு,

உளுந்தம் பருப்பு- தேவையான அளவு,

சீரகம்- தேவையான அளவு,

பெருங்காயம்- தேவையான அளவு,

கறிவேப்பிலை- தேவையான அளவு,

கொத்துமல்லி-தேவையான அளவு
 

 செய்முறை:

 

  1. வரகரிசி உளுந்தம் பருப்பு போன்றவற்றினை 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. அடுத்து இதனை இட்லி மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  4. அடுத்து  வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், காய்ந்த  மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், வெங்காயம் சேர்த்து தாளித்து வதக்கவும்.
  5. தாளித்த கலவையினை, மாவில் கலந்து பணியாரச்  சட்டியில் வார்த்து எடுத்தால் வரகரிசி பணியாரம் ரெடி.

From around the web