ஆரோக்கியமான சர்க்கரைவள்ளிக்கிழங்கு போண்டா!!

சர்க்கரை வள்ளிக்கிழங்கினை நாம் பொதுவாக வேகவைத்தே சாப்பிடுவோம். அந்த வகையில் இப்போது சர்க்கரைவள்ளிக்கிழங்கு போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
 

சர்க்கரை வள்ளிக்கிழங்கினை நாம் பொதுவாக வேகவைத்தே சாப்பிடுவோம். அந்த வகையில் இப்போது சர்க்கரைவள்ளிக்கிழங்கு போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 100 கிராம்,
பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
எலுமிச்சைப்பழம் (சிறியது) - ஒன்று,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
கடலை மாவு - ஒரு கப்,
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
சோள மாவு - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

1. பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை நறுக்கி கொள்ளவும்.
2. அடுத்து சர்க்கரைவள்ளிக்கிழங்கை தண்ணீர் ஊற்றி விசில்விட்டு இறக்கி, தோலுரித்து மசிக்கவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, பொட்டுக்கடலை, உப்பு, கிழங்கு எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.
4. அடுத்து இதனை உருண்டைகளாகப் பிடித்து பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கரைத்துக்  கொள்ளவும்.
5. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி உருண்டைகளை மாவில் போட்டு வேகவிட்டு இறக்கினால் சர்க்கரைப் போண்டா ரெடி.
 

From around the web