ஆரோக்கியம் நிறைந்த கேழ்வரகு பணியாரம்!!

கேழ்வரகு பிறந்து 6 மாதங்களே ஆன குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்ற சிறு தானிய வகையாகும். இப்போது நாம் இந்த கேழ்வரகில் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கேழ்வரகு பிறந்து 6 மாதங்களே ஆன குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்ற சிறு தானிய வகையாகும். இப்போது நாம் இந்த கேழ்வரகில் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

கேழ்வரகு மாவு - 1 கப்

உளுந்து மாவு - கால் கப்

கடுகு - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1

கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லித்தழை- சிறிதளவு,

கறிவேப்பிலை – சிறிதளவு

நல்லெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

1. கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.

2. அடுத்து கேழ்வரகு மாவு, உளுந்து மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து தாளித்து மாவுடன் கலக்கவும்.

4. அடுத்து மாவில் தாளித்த கலவையைக் கொட்டி, பணியாரக் கல்லில் எண்ணெய் தடவி மாவினை ஊற்றி வேகவைத்து எடுத்தால் கேழ்வரகு பணியாரம் ரெடி.

From around the web