ஆரோக்கியம் நிறைந்த ராகி மில்க் ஷேக்!!
 
நாம் கண்ட கண்ட செயற்கையான பானங்களைக் குடிப்பதைவிட பாரம்பரியமான தானியங்களில் செய்த பானங்களைக் குடிப்பது நல்லது, அந்தவகையில் இப்போது ராகியில் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
நாம் கண்ட கண்ட செயற்கையான பானங்களைக் குடிப்பதைவிட பாரம்பரியமான தானியங்களில் செய்த பானங்களைக் குடிப்பது நல்லது, அந்தவகையில் இப்போது ராகியில் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
ராகி மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
கொக்கோ பவுடர் - 1/2 ஸ்பூன் 
வென்னிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன் 
பால் - 2 கப் 
சர்க்கரை - 1 ஸ்பூன் 

செய்முறை: 
1.    ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி ஆறவிடவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் கொக்கோ பவுடருடன் நீர் சேர்த்து வேகவிட்டு இறக்கி ஆறவிடவும்.
3.    அடுத்து மிக்சியில் பால், சர்க்கரை அரைத்த கலவை, வென்னிலா எசன்ஸ் சேர்த்து 3 முறை அடித்து ஐஸ்கட்டி போட்டுக் கலந்தால் ராகி மில்க் ஷேக் ரெடி.
 
From around the web