ஆரோக்கியம் நிறைந்த வேப்பம் பூ சூப்!

வேப்பம் பூ செரிமானப் பிரச்சினைகள், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்,  மலச்சிக்கல் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளது. இந்த வேப்பம் பூவில் சூப்பினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

வேப்பம் பூ செரிமானப் பிரச்சினைகள், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்,  மலச்சிக்கல் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளது. இந்த வேப்பம் பூவில் சூப்பினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

 

வேப்பம் பூ – கைப்பிடியளவு

நெய் - 4 டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

நாட்டுச் சர்க்கரை - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

 

  1. வாணலியில் நெய் ஊற்றி வேப்பம் பூவைப் போட்டு வதக்கி நாட்டுச் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  2. அடுத்து கொதித்த கலவையுடன்  உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு கலந்து கொதிக்கவிடவும்.
  3. நன்கு கொதிக்கவிட்டு இறக்கினால் வேப்பம் பூ சூப் ரெடி.

From around the web