ஆரோக்கியம் நிறைந்த வேப்பம்பூ ரசம்!!
 

வேப்பம் பூ கசப்புத் தன்மை கொண்டதாக இருந்தாலும், குடலில் உள்ள புழுக்கள், பூச்சிகள் அனைத்தையும் நீக்கிவிடும் தன்மை கொண்டதாக உள்ளது. 

 
ஆரோக்கியம் நிறைந்த வேப்பம்பூ ரசம்!!

தேவையானவை: 
வேப்பம்பூ – கைப்பிடியளவு 
நெய் - 2 ஸ்பூன் 
புளி - எலுமிச்சை அளவு 
மிளகு - 1 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 3 
கொத்தமல்லி இலை – தேவையான அளவு 
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் 
எண்ணெய் – தேவையான அளவு 
கடுகு - 1/2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 
1.    வாணலியில் நெய் ஊற்றி வேப்பம்பூவை வதக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியைப் போட்டு நன்கு ஊறவைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்ஸியில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். 
3.    அடுத்து புளித் தண்ணீர், அரைத்த பொடி, மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். 
4.    அடுத்து வேப்பம்பூ மற்றும் கொத்தமல்லியை தூவி மற்றொரு பாத்திரத்தில் கடுகு சேர்த்து தாளித்துக் கொட்டினால் வேப்பம்பூ ரசம் ரெடி.

From around the web