ஆரோக்கியம் நிறைந்த கேழ்வரகு புட்டு ரெசிப்பி!!
 

கேழ்வரகில் நாம் இப்போது ரொம்பவும் டேஸ்ட்டியான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
 

தேவையானவை:
கேழ்வரகு மாவு – 200 கிராம்
தேங்காய்ப் – 4 துண்டு
ஏலக்காய்த் தூள் – சிறிதளவு
உப்பு – 1 பின்ச்
சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை:
1.கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசையவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். 
2. அடுத்து இட்லித் தட்டில் ஈரத்துணி போட்டு  பிசைந்த மாவைக் மாவை வேகவைக்கவும்.
3. அடுத்து மாவினைத் தட்டில் போட்டு தேங்காய்ப்பூ ,சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்தால் ஆரோக்கியம் நிறைந்த கேழ்வரகு புட்டு ரெடி.

From around the web