ஆரோக்கியம் நிறைந்த தேங்காய்ப் பால் சாதம்!!

தாய்ப்பாலுக்கு இணையான சத்துகள் கொண்ட தேங்காய்ப் பாலில் உள்ள சத்துகள் நாம் அனைவரும் அறிந்தவையே. இத்தகைய தேங்காய்ப் பாலில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

தாய்ப்பாலுக்கு இணையான சத்துகள் கொண்ட தேங்காய்ப் பாலில் உள்ள சத்துகள் நாம் அனைவரும் அறிந்தவையே. இத்தகைய தேங்காய்ப் பாலில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை  :

பாசுமதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 3
பூண்டு - 2
பச்சை மிளகாய் - 7
தேங்காய்ப் பால்  - 2 டம்ளர்
பட்டை- 2,
லவங்கம்- 2,
கிராம்பு -2,
ஏலக்காய் -2,
அன்னாசி பூ - 2,
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
கொத்தமல்லி - கைப்பிடியளவு
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை  :

1. கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அரிசியை ஊறவைத்து அலசிக் கொள்ளவும்.
 2. அடுத்து குக்கரில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப் பூ சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
3. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
4. அடுத்து இத்துடன் அரிசி மற்றும் தேங்காய் பால் ஊற்றி 2 விசில் போட்டு இறக்கி நெய் சேர்த்து இறக்கினால் தேங்காய் பால் சாதம் ரெடி.


 

From around the web