ஆரோக்கியம் நிறைந்த காலிஃப்ளவர் சூப்
 

பேலியோ டயட் இருப்பவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரு முக்கிய காய்கறி என்றால் அது காலிஃப்ளவர்தான். இத்தகைய காலிஃப்ளவரில் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 

பேலியோ டயட் இருப்பவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரு முக்கிய காய்கறி என்றால் அது காலிஃப்ளவர்தான். இத்தகைய காலிஃப்ளவரில் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:
காலிஃப்ளவர் - 1
பூண்டு – 1
நெய் - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி- 1
பட்டை - 1 துண்டு
மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
சீரகத் தூள்- ½ ஸ்பூன்
கொத்தமல்லி  இலை– தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு, 

செய்முறை :
1. காலிஃப்ளவர் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் காலிஃப்ளவரைப் போட்டு எடுத்தால் அதில் உள்ள புழுக்கள் காணாமல் போகும்
2. அடுத்து வெங்காயம், தக்காளி, பூண்டு, கொத்தமல்லியை நறுக்கி கொள்ளவும்.
2. வாணலியில் நெய் விட்டு பட்டை போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் கொத்தமல்லி இலை, காலிஃப்ளவர், உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
3. அடுத்து மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் காலிஃப்ளவர் சூப் ரெடி. 
 

From around the web