ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பருப்பு கூட்டு!!
 

வாழைத் தண்டு உடல் எடையினைக் குறைப்பதாக உள்ளது. இப்போது நாம் வாழைத்தண்டில் இப்போது பருப்பு கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பருப்பு கூட்டு!!

தேவையானவை :
வாழைத்தண்டு - 1 
பாசிப் பருப்பு – 50 கிராம்
சாம்பார் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
தேங்காய் – ½ மூடி
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1/2  ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
வெங்காயம் - 2
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :
1. வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.  அடுத்து  மிக்சியில் தேங்காய், சீரகம் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாழைத்தண்டின் நாரை நீக்கி விட்டு சிறிது சிறிதாக நறுக்கி மோரில் போட்டு ஊற வைக்கவும்.
3. அடுத்து பாசிப் பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து  நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து வாழைத்தண்டினைப் போட்டு வதக்கி சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் தெளித்து வேக விடவும்.
5. அடுத்து வேகவைத்த பருப்பு, அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து
வேகவிட்டு இறக்கினால் வாழைத்தண்டு பருப்பு கூட்டு ரெடி.
 

From around the web