ஆரோக்கியம் நிறைந்த ஆவாரம் பூ டீ!
 

ஆவாரம்பூ இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைப்பதாக உள்ளது, இப்போது நாம் ஆவாரம்பூவில் டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
ஆரோக்கியம் நிறைந்த ஆவாரம் பூ டீ!

தேவையானவை:
ஆவாரம் பூ - கைப்பிடியளவு,
ஏலக்காய் - 2,
பட்டை – 1 துண்டு,
தேன் -  2 ஸ்பூன்,
பால் – 1 டம்ளர்.

செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு ஆவாரம் பூ, பட்டை, ஏலக்காய் சேர்த்து கொதிக்கவிடவும்.
2. அடுத்து வேறொரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். அடுத்து காய்ச்சிய பாலுடன் கொதிக்கவைத்த நீரைச் சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு தேன் சேர்த்துக் கலந்தால் ஆவாரம் பூ டீ ரெடி.

From around the web