தயிர் சாதத்திற்கு ஏற்ற பூண்டு ஊறுகாய்!
 

பூண்டு அதிக செரிமானத் தன்மை கொண்டது, இத்தகைய பூண்டினைக் கொண்டு ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

 
தயிர் சாதத்திற்கு ஏற்ற பூண்டு ஊறுகாய்!

தேவையானவை :
பூண்டு - 3
எலுமிச்சை - 2
சீரகம் - 2 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1. பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். எலுமிச்சையில் சாறு பிழிந்து கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் விடாமல் சீரகம், வெந்தயம், தனியாவைப் போட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி பூண்டை நன்கு வதக்கி அரைத்த பொடியை போட்டு வதக்கவும்.
3. அடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி 
அடுத்து எலுமிச்சை சாறு சேர்த்து வேகவிட்டு இறக்கினால் பூண்டு ஊறுகாய் ரெடி.
 

From around the web