நாவில் எச்சில் ஊறவைக்கும் நாஞ்சில் மீன் குழம்பு!!

மீன் அதிக அளவில் புரதச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, அனைவரும் சாப்பிட ஏற்ற மீனில் நாம் பல வகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிட்டு இருப்போம், அந்த வகையில் இப்போது நாஞ்சில் மீன் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
 

மீன் அதிக அளவில் புரதச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, அனைவரும் சாப்பிட ஏற்ற மீனில் நாம் பல வகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிட்டு இருப்போம், அந்த வகையில் இப்போது நாஞ்சில் மீன் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை
மீன் – அரை கிலோ
புளி - எலுமிச்சம் பழ அளவு
பச்சைமிளகாய் - 2
தேங்காய் – 1/2 மூடி
பெரிய வெங்காயம் – 1 
தனியா - 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை : 

1.    மீனை சுத்தம் செய்து மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அடுத்து புளியை ஊறவைத்துக் கரைத்து கொள்ளவும்.
2.    அடுத்து கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து தேங்காயை துருவி வாணலியில் எண்ணெய் ஊற்றி தேங்காய் துருவல், வெங்காயம், மல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, பெருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
4.    அடுத்து இந்தப் பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
5.    அடுத்து புளிக்கரைசல், உப்பு சேர்த்து கலந்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெந்தயத்தை தாளித்து, கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி குழம்பைக் கொதிக்கவிடவும்.
6.    அடுத்து அதனுடன் மீன் சேர்த்து இறக்கினால் நாஞ்சில் மீன் குழம்பு ரெடி.
 

From around the web