குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ் ஆம்லெட்
 
ரசம் சாதம் அல்லது சாம்பார் சாதத்திற்கு 5 நிமிடத்தில் செய்யக்கூடிய முட்டை சீஸ் ஆம்லெட் ரெசிப்பியினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ் ஆம்லெட்

ரசம் சாதம் அல்லது சாம்பார் சாதத்திற்கு 5 நிமிடத்தில் செய்யக்கூடிய முட்டை சீஸ் ஆம்லெட் ரெசிப்பியினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
முட்டை - 2
வெண்ணெய் - 1 ஸ்பூன்
சீஸ்  - 2 ஸ்பூன் துருவியது
பச்சை மிளகாய் - 2 
வெங்காயம் - 1
கொத்தமல்லி இலை - 2 ஸ்பூன்
மிளகுத் தூள்- 2 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
1. வெங்காயம், கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் முட்டை, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி இலை, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலக்கவும்.
2. அடுத்து வாணலியில் வெண்ணெயினைப் போட்டு முட்டையினை ஊற்றி ஓரளவு வெந்தபின்னர்
சீஸினைத் தூவவும். 
3. இருபுறமும் போட்டு திருப்பி எடுத்தால் சீஸ் ஆம்லெட் ரெடி.

From around the web