சுவையான கிராமத்து கடலைப் பருப்பு  துவையல்!!
 

கடலைப்பருப்பு அதிக அளவிலான புரதச் சத்துகளைக் கொண்டதாக உள்ளது, இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் சாப்பிடலாம். இப்போது சுவையான கடலைப்பருப்பு துவையல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்

 

கடலைப்பருப்பு அதிக அளவிலான புரதச் சத்துகளைக் கொண்டதாக உள்ளது, இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் சாப்பிடலாம். இப்போது சுவாய்யான கடலைப்பருப்பு துவையல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்

தேவையானவை:

கடலைப் பருப்பு- 50 கிராம்
காய்ந்த மிளகாய்- 3
பெருங்காயம்- சிறிதளவு
சின்ன வெங்காயம்- 10
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
1.    கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாயை வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் கடலைப்பருப்பு, மிளகாய், வெங்காயம், உப்பு, பெருங்காயம் சேர்த்து லேசாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். 

இந்த சட்னியை கிராமப் புறங்களில் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடுவர். இதனை சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.


 

From around the web