சுவையான வஞ்சரம் மீன் குழம்பு செய்யலாமா?
 

வஞ்சரம் மீனில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இதனால் பற்கள் மற்றும் எலும்புகளை இது வலுவாக்கச் செய்வதாக உள்ளது. இப்போது நாம் வஞ்சரம் மீனில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சுவையான வஞ்சரம் மீன் குழம்பு செய்யலாமா?

வஞ்சரம் மீனில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இதனால் பற்கள் மற்றும் எலும்புகளை இது வலுவாக்கச் செய்வதாக உள்ளது. இப்போது நாம் வஞ்சரம் மீனில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை: 
வஞ்சரம் மீன் - 500 கிராம்
சின்ன வெங்காயம் - 10 
பூண்டு – 1
தக்காளி - 1/4 கிலோ 
புளி - எலுமிச்சை அளவு 
மிளகாய்த் தூள் - 1/4 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
தனியாத் தூள் - 2 ஸ்பூன் 
கடுகு - 1 ஸ்பூன் 
வெந்தயம் - 1/4 ஸ்பூன் 
சீரகம் - 1/4 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு 

செய்முறை: 
1.    மீனை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்கவும். 
3.    அடுத்து வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
4.    அடுத்து அதில் புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும். 
5.    குழம்பு கொதித்த பின்னர், அதில் கறிவேப்பிலை தூவி இறக்கினால் வஞ்சரம் மீன் குழம்பு ரெடி.
 

From around the web